பதிவு செய்த நாள்
26
ஜன
2026
08:01
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.1 ல் தேரோட்டம் நடக்கிறது .
பெரியநாயகி அம்மன் கோயிலில் துவங்கிய தைப்பூச விழா கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின் கொடிகட்டி மண்டபத்தில் சூரியன், சந்திரன், வேல், மயில், சேவல், தாம்பூலம்,துாபம், மணி, மேல்புறம் ஓம் முருகா என எழுதப்பட்டிருந்த கொடி வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. தைப்பூச கொடி கொடிக்கம்பத்தில் காலை 9:52 மணிக்கு ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். தீபாராதனை நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கிரிவீதி பகுதிகளில் காவடி எடுத்து வந்தனர். இரவு 7:30 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி ரதவீதி உலாவும் நடந்தது. விழா முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் ஜன.,31 ல் நடக்கிறது . அன்று மாலை வெள்ளி தேரோட்டம், தைப்பூச திருநாளான பிப்.,1 மாலை 4:00 மணிக்கு தைப் பூச தேரோட்டம் ,பிப்., 4 மாலை தெப்பத் தேர் திருவிழாவும் நடக்கிறது.