கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2026 12:01
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.