திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மார்கழியை முன்னிட்டு நாளை (டிச., 17) முதல் ஜன., 14 வரை நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப் பட்டு உச்சிகால பூஜை முடிந்து பகல் 12:00 மணிக்கு சாத்தப்படும். மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு சாத்தப்படும்.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8:00 மணிக்கு சாத்தப்படும்.மார்கழி முழுவதும் அதிகாலை 5.30 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படும். ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு தினமும் சிறப்பு பூஜை நடக்கும்.