பதிவு செய்த நாள்
15
டிச
2019
06:12
சுந்தராபுரம்: மார்கழி திருவிழா குழு சார்பில், ஆண்டுதோறும் மார்கழித் திருவிழா என்ற தலைப்பில், ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்தாண்டுக்கான நிகழ்ச்சி நாளை மறுநாள், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, அன்னை இந்திரா நகரில் உள்ள, செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில் துவங்குகிறது. வரும், 23ம் தேதி வரை, தினமும் மாலை, 5:30 மணிக்கு நடக்கும் இத்தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில், சொற்பொழிவாளர்கள் பேசுகின்றனர்.
முதல் நாள் நிகழ்ச்சியாக, நாளை மறுநாள், தினம் தினம் தெய்வீகம் என்ற தலைப்பில், ஸம்ப்ரதிஷ்டானந்தா பேசுகிறார். 18ம் தேதி, அப்பரின் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பில், பவானி தியாகராஜன், 19ம் தேதி, ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்ற தலைப்பில், புலவர் பூங்கொடி, 20ம் தேதி, கண்ணதாசன் கண்ட கடவுள் என்ற தலைப்பில், மரபின் மைந்தன் முத்தையா, 21ம் தேதி, ஆழ்வார்கள் கண்ட அரங்கன் என்ற தலைப்பில், பேராசிரியை விஜயசுந்தரி, 22ம் தேதி கண்ணன் என்னும் மன்னன் என்ற தலைப்பில், பாரதி சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.நிறைவு நாளான, 23ம் தேதி ஜோதி பார்வதி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி இடம்பெறுகிறது; பகவானின் நாம சங்கீர்த்தனம் இசைக்கப்படுகிறது.