பதிவு செய்த நாள்
16
டிச
2019
04:12
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் கம்பன் கழகம் சார்பில், ஆறாம் ஆண்டாக செங்குந்தர் திருமண மண்டபத்தில், மார்கழி பெருவிழா நாளை (டிச.,17) மாலை, 6:30 மணிக்கு துவங்குகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியில், இலக்கியம் காட்டும் இல்லறம் என்ற தலைப்பில், பேராசிரியை நாஞ்சில் முத்துலட்சுமி பேசுகிறார். சேலம் செங்குட்டுவன், சங்கர நாரயணன், அருட்செல்வி, அழகர் ராமானுஜம், சஞ்சீவிராயன், பனசை மூர்த்தி, சவுந்திரபாண்டியன், நெல்லை சுப்பைய்யா, அறிவொளி, கீரை பிரபாகரன், சாத்தம்மை ப்ரியா, சுந்தர ஆவுடையப்பன், ராமன், தேவி குணசேகரன், சீனி சம்பத், உழவன் தங்கவேல், லீலாவதி கரிகாலன், தமிழரசி செந்தில்குமார் மற்றும் வையாபுரி ஆகியோர் ஒவ்வொரு நாளும் இரவு, 7:00 மணி முதல், 8:30 மணி வரை வெவ்வெறு தலைப்புகளில் பேசுகின்றனர். ஜனவரி, 14 வரை சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை, வேலநத்தம் கம்பன் கழக கவுரவ தலைவர் சாலை சண்முகம், தலைவர் ராவணன், நிறுவனர் செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்து வருகின்றனர்.