பதிவு செய்த நாள்
16
டிச
2019
12:12
திருமங்கலம்:திருமங்கலம் ராயபாளையம் முக்தி நிலைய சத்ய யுக சிருஷ்டி கோயில் வளாக பிரம்மன், ஐயப்பன்கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.இங்கு 127 கோயில் கள், 272 சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுஉள்ளன.
ஏழு கட்டங்களாக கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று 15ம் தேதி 4வது கட்டமாக காலை 6:35 முதல் 7:10 மணிக்குள் தனுசு லக்னத்தில் குபேரன், சித்ராதேவி, சங்கநிதி, பத்மநிதி, ஐயப்பன், காளி, அன்னபூரணி, கருப்பணசாமி, ஐராவதம் மற்றும் கற்பக விருக்ஷம் உட்பட பரிவார தெய்வ கோயில்களிலும், காலை 11:30 முதல் 12:00 மணிக்குள் கும்ப லக்னத்தில் பிரம்மன், இந்திரன், இந்திராணி, நான்கு வேத துவார பாலகர்கள் மூலவிக்ரஹங்களுக்கும், கோபுர கலங்சங்களுக்கும் கும்பாபிஷே கம் நடந்தது.
முக்திநிலைய தலைவர் வசந்தசாய் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். இமயமலை யோகி யோகானந் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாக அறங்காவலர் வெங்கட்ராமன் ஏற்பாடுகளை செய்தார். சிவகணேஷ் சிவாச்சார்யார் குழுவினர் கும்பாபிஷேகம் நடத்தினர்.