திருப்பரங்குன்றம் திருவிழாவிற்காக தெப்பத்திற்கு நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2019 12:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்திற்கு தெப்பத் திருவிழா விற்காக நீர் நிரப்பப்படுகிறது.
இந்த தெப்பத்தில் ஒவ்வொரு தை மாதம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மிதவை தெப்பம் அமைத்து சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மிதவை தெப்பம் காலை மூன்று சுற்றுக்கள் வரும்.
இரவு மைய மண்டப ஊஞ்சலில்சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருள்வர். தெப்பம் மூன்றுமுறை வலம் வரும்.இந்தாண்டு பிப்., 4 இத்திருவிழா நடக்கிறது. இதற்காக நேற்று (டிசம்., 15ல்) முதல் அருகேவுள்ள ஆழ்குழாயி லிருந்து தெப்பத்திற்கு நீர் நிரப்பப்படுகிறது. தெப்பத்திற்குள்ள செடிகள், குப்பையை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.