பதிவு செய்த நாள்
16
டிச
2019
12:12
கோவை: கோவை, ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள, ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்து வரும் முத்துஸ்வாமி தீட்சிதர் ஜெயந்தி விழா முன்னிட்டு, நடந்து வரும் கீர்த்தனாஞ் சலி இசை விழா, இன்று 16ம் தேதி நிறைவடைகிறது.
ராம்நகர் ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கம், கோவை சத்கார்யா அறக்கட்டளை சார்பில், முத்துஸ்வாமி தீட்சிதர் ஜெயந்தி விழா முன்னிட்டு, இசை நிகழ்ச்சி, நேற்று முன்தினம் 14ம் தேதி துவங்கியது. முத்துஸ்வாமி தீட்சிதரின் வீணை, அவரது உருவப்படம் முன் வைத்து, பூஜை செய்யப்பட்டது.
இரண்டாம் நாளான் நேற்று 15ம் தேதி காலை, சென்னை கடம் வித்வான் விநாயகராம், நிகழ்ச் சியை துவக்கி வைத்தார். பல்வேறு இசை கலைஞர்கள், குழந்தைகளின் இசை நிகழ்ச்சி இரவு வரை நடந்தது.ஸ்ரீஐயப்ப பூஜா சங்க தலைவர் ஜெகன், செயலாளர் சி.ஜி.வி. ஆனந்த், சத்கார்யா அறக்கட்டளை தலைவர் ரவி, முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சாவளியை சேர்ந்த முத்துசாமி, கோவை அரசு இசை கல்லுாரி முன்னாள் முதல்வர் சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இசை விழா, இன்று 16ம் தேதி நிறைவடைகிறது.