எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் மனித மீட்பு வரலாறு என்பது நீண்ட வரலாறை உள்ளடக் கியது. கடவுள் அளித்த சுதந்திரத்தை தவறுதலாக பயன்படுத்தி, அழிவை நோக்கி மனிதன் நகர்ந்த போது துன்பம், நோய், சாவு போன்ற தீமைகளுக்கு உள்ளானான். இதிலிருந்து மீட்டெ டுத்து மனிதத்தை புனிதம் நோக்கி அழைத்துச் செல்ல கடவுள் திருஉள்ளம் கொண்டார்.
அடிமைத்தளையில் அகப்பட்டு, துன்புற்ற இஸ்ராயேல் மக்கள் அழுது புலம்பி கூக்குரலிட்ட போது (விடுதலை பயணம் : 2 : 23 - 25) அவர்களது குரலை கேட்ட கடவுள் மோசேயை அனுப்பி மீட்டார். அவரைத் தொடர்ந்து நீதித் தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் மக்களை வழி நடத்திய போதும், தங்களுக்கு சரியான தலைமை இல்லாமையால், நிம்மதியற்று, பொருளாதார, சமூக, அரசியல் அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்க மாரனாத்தா ‘ஆண்டவரே வருக‘ என எதிர்பார்த்து காத்திருந்தனர் இஸ்ராயேல் மக்கள். வரவிருக்கும் மெசியா கடவுளின் வாரிசாக தாவீதின் அரியணையில் அமர்ந்து தங்களை ஆட்சி செய்வார் (எசாயா: 9 : 6-7) என்றும் அவரது அரசாட்சி இவ்வுலக அடிமைத்தனத்திலி ருந்து நம்மை காப்பாற்றும் என்றும் நம்பிய இஸ்ராயேல் மக்கள் இந்த அடிமைத்தன வாழ்வு மாற்றம் பெற அரசால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையிலே அவரை அரசராக எதிர்பார்த் துக் காத்திருந்தனர்.
இஸ்ராயேல் மக்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறியதா? விண்ணின் விடியல் எங்கே? எப்படி உதித்தது?