தேனி: கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தையொட்டி தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிவனுக்கு 1,008 சங்காபிேஷகம் நடந்தது. சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.போடி
போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் சிவனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. தலைவர் திவாகரன் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன், பொருளாளர் பாலமுருகன், துணைத்தலைவர் குமரேசன், துணைசெயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். யாக பூஜைகள், தீர்த்தம் நிரப்பப்பட்ட 108 சங்குகள் மூலம் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அலங்காரத்தை சரவண சாஸ்திரிகள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.