திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்கவும் 108 சங்காபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு தொடங்கி பகல் 12:00 மணி வரை நடந்தது.
அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. செந்தில்பட்டர், கண்ணன் பட்டர், ராஜா பட்டர், விக்னேஷ் பட்டர் நடத்தினர். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட பக்தர் கள் செய்திருந்தனர்.