பதிவு செய்த நாள்
17
டிச
2019
02:12
திண்டுக்கல் : கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் பத்மகீரீஸ்வரர், அபிராமியம்மன் கோயிலில் நேற்று 16ம் தேதி யாகத்துடன் 1008 சங்குகள் வைத்து அபிஷேக பூஜைகள் நடந்தது.
அதன்பின் பத்மகிரீஸ்வருக்கு சங்காபிஷேகம் செய்து சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திண்டுக்கல் மேற்குரதவீதி சிவலிங்கேஸ்வரர் கோயில், கூட்டுறவுநகர் செல்வ விநாயகர் கோயில் ஆகிய இடங்களிலும் சோமவார விரதம் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத் தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.பல்வேறு கோயில் தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு அபிஷேகம், சந்தனம், பால் என பல்வேறு திரவியங் களுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. விரைவாக திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதற்காக சிறப்பு யாக வேள்வியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற் றனர்.
* கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது.
சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், வேதி தீர்த்த பூஜை நடந்தது. சங்காபிஷேகத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* வேடசந்தூர்: வேடசந்தூர் காசிவிசுவநாதர் விசாலாட்சி கோயிலில், சோமவாரத்தை முன்னி ட்டு 108 சங்கு பூஜை நடந்தது. காசி விசுவநாதருக்கு பால், தயிர்.நெய் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. நடராஜ சிவாச்சார்யார் தலைமையில் நடந்த இந்த சிறப்பு பூஜையில், திரளானோர் பங்கேற்றனர்.