பொள்ளாச்சி அமணீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2019 02:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம்பட்டிஅமணீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக விழா நேற்று 16ம் தேதி நடந்தது.நேற்று முன்தினம் 15ம் தேதி, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. கலச ஆவாகனம், தேவபாராயணம், யாக பூஜை, மூல மந்திரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, நேற்று 16ம் தேதி, காலை, 8:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, வேதபாராயணம், கடம் புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 108 சங்காபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.