பதிவு செய்த நாள்
18
டிச
2019
02:12
குமாரபாளையம்: சபரிமலை சேவைக்கு செல்லும் கல்லூரி மாணவர்களுக்கு வழியனுப்பும் விழா குமாரபாளையத்தில் நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு சேவை செய்ய, நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் குமாரபாளையம், ப.வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட பல பல ஊர்களிலிருந்து, தனியார் கல்லூரி மாணவர்கள் அனுப்பப்படுவது வழக்கம்.
இந்தாண்டு, ப.வேலூர், கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவர்கள், 100 பேர் சபரிமலை க்கு புறப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா, குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் நடந்தது. மாவட்ட பொருளாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜெகதீஷ், ஐயப்ப சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.