பதிவு செய்த நாள்
18
டிச
2019
02:12
கோத்தகிரி : ஊட்டி தொதநாடு சீமைக்கு உட்பட்ட, மேல் கம்பட்டி கிராமத்தில், ஒன்னதலை ஹெத்தையம்மன் அழைப்பு ’அரவட்டை’ நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரியில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, கடந்த, 7ம் தேதி ’சக்கலாத்தி’ என்ற பண்டிகையுடன் துவக்கி நடந்து வருகிறது.விரதம் மேற் கொண்டுள்ள ஹெத்தையம்மன் பக்தர்கள், பல்வேறு கிராமங்களில், அரவட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.அதன் ஒரு கட்டமாக, தொதநாடு சீமைக்கு உட்பட்ட, மேல் கம்பட்டி கிராமத்தில், நடைபெற்ற அரவட்டை நிகழ்ச்சியில், ஒன்னதலை பக்தர்கள் பங்கேற்றனர். மேல் கம்பட்டி ஊர் மக்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ’கத்திகை’ எனப்படும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.