வால்பாறை : வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 33ம் ஆண்டு மண்டல பூஜைத் திருவிழா, நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கொடியை சுப்புராஜ் குருசாமி ஏற்றினார். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வகையான அபிேஷக, அலங்காரபூஜை நடந்தது.விழாவில் வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து ஐயப்பபக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைகின்றனர்.வரும், 22ம் தேதி வரை நடக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்பசேவாசங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் சந்திரன், பொருளாளர் அழகிரி ஆகியோர் செய்து வருகின்றனர்.