பதிவு செய்த நாள்
19
டிச
2019
12:12
கோவை: கோவை அருகே எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் விழாவில், கால்நடை கண்காட்சி நடந்தது. எட்டிமடையில், பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எல்லை மாகாளியம்மன் கோவிலின் நான்காம் ஆண்டு விழா நேற்று காலை, 7:00 மணிக்கு, மகா சண்டி யாகத்துடன் துவங்கியது. மேலும், கோமாதா பூஜை, அன்னதானம் நடந்தன.
விழாவையொட்டி, கால்நடைகளின் கண்காட்சியும் நடந்தது. பூச்சி காளைகள், பூச்சி மாடுகள், சேவல்கள், காட்டியாவாடி மற்றும் நாட்டு குதிரை வகைகள், மற்றும் காளைகள் என, 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை மக்கள் பார்வையிட்டனர். மேலும் சில வகை நாய்களும், ரேக்ளா வண்டிகளும் மக்களை கவர்ந்தன. இசைக்கேற்ப நடனமாடிய குதிரை, மக்களை பரவசப்படுத்தியது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். சிறந்த கால்நடைகள் தேர்வு செய்யப் பட்டு, பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளையினர், தர்மலிங்கேஸ்வரர் அறங்காவலர் குழு மற்றும் ஐயப்பா சேவா சங்கத்தினர் செய்தனர்.