சபரிமலை:பக்தர்கள் கூட்டத்தால் சன்னிதானத்திற்கு டிராக்டரில் பொருட்கள் கொண்டு செல்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
கூட்டம் அதிகமாக இருக்கும் போது டிராக்டர்கள் ஓட்ட போலீஸ் தடை விதித்துள்ளது. காலை யிலும், இரவிலும் 11:00 முதல் 3:00 வரை மட்டும் டிராக்டர்கள் இயக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதனால் சன்னிதானத்தில் அப்பம், அரவணை தயாரிப்புக்கான சர்க்கரை மற்றும் பொருட்கள், பூக்கள், உணவு தயாரிக்க பொருட்கள் கொண்டு வருவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ் சேவை நிலக்கல்லில் ஐயப்ப சேவா சங்கம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது. நிலக்கல் – பம்பை இடையே கேரள அரசு போக்குவரத்துக்கழகம் ஒரு மாதத்தில் 26 ஆயிரத்து 778 முறை பஸ்களை இயக்கியுள்ளது. கடந்த ஆண்டு இது 10 ஆயிரத்து 132ஆக இருந்தது. டிக்கெட் வருமானம் 11.40 கோடியாக உயர்ந்துள்ளது.