காரைக்கால்: காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று உலக நன்மை வேண்டி மீனவப் பெண்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் 54 மீனவ கிராமத்தில் பொது கிராமமாக காரைக்கால் மேடு மீனவ கிராமம் உள்ளது. மீனவ மக்கள் நலன்கருதி ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சித்தி விநாயகர், ரேணுகா தேவி, பால ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், இயற்கை சீற்றத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம மக்கள் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.