பதிவு செய்த நாள்
20
டிச
2019
12:12
மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில், கால பைரவர் சுவாமிக்கு மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு அலங்கார வழிபாடு, நேற்று 19.12.2019 வியாழக்கிழமை நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது, பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கால பைரவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி சந்தனக் காப்பு சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். விழா ஏற்பாடுகளை உபயதாரர் ராஜா , சுந்தர்ராஜன் குடும்பத்தினர், ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.