பதிவு செய்த நாள்
21
டிச
2019
02:12
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், 49ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், அய்யப்பன் சன்னிதி உள்ளது. இங்கு, 49ம் ஆண்டு திரு விளக்கு பூஜை, 18ம் தேதி காலை, கணபதி பூஜையுடன் துவங்கியது.மறுநாள், அய்யப்ப சுவாமி படம், செட்டித்தெரு காளிகாம்பாள் கோவிலில் இருந்து, பஞ்ச வாத்தியத்துடன் எழுந்தருளி னார்.மாலை, 6:00 மணிக்கு பஞ்சவாத்தியம், விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் அய்யப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது. இரவு, மகா தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவு அய்யப்பன் ஜனனம் நடந்தது.
நேற்று 20ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு திரி விழிச்சல், பால்கிண்டி, அய்யப்பன் வாவர் வெட்டும் தடவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அய்யப்பனை தரிசித்தனர்.