செம்பட்டி : ஆத்துார் ஐயப்பன் மணிமண்டபத்தில், மண்டலாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, மகா கணபதி ஹோமம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், சரண கோஷ பாராயணம் நடந்தது. விசேஷ பூஜைகளுடன், மண்டலாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்ன தானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.