தேவாரம் : அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயில் ஸ்தல அர்ச்சகர் வெங்கட்ராமன் கூறியதாவது: சுயம்பு மூலவர் வீற்றிருக்கும் புண்ணிய தலமான இக்கோயிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா டிச., 26ல் வருகிறது. அன்று சூரிய கிரகணம் என்பதால், கோயில் நடை சாத்த வேண்டும் என்பது ஐதீகம். அதனால், சிறப்பு பூஜைகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருநாள் முன்னதாக டிச., 25 அன்று அனுமன் ஜெயந்தி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.