கோயம்புத்துார்: பேளூர் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மட துணைதலைவர் சுவாமி கவுதமானந்தர், பெரியநாயக்கன்பாளையத்தில் சுவாமி ராமகிருஷ்ணர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் 15 க்கும் மேல் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இங்கு சுவாமி ராமகிருஷ்ணர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட சுவாமி கவுதமானந்தர் பேசுகையில், ‛‛கோயில்கள் இந்த சமுதாயத்தை நெறிப் படுத்துகிறது. நாம் அமைதியாக வாழ, கடமைகளை செவ்வனே செய்ய கோயில்கள் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டில் அமைதி நிலவ கோயில்களின் பங்கு அளப்பறியது. மனிதர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்றும் பெருமை கோயில்களுக்கு உண்டு” என்றார்.