குரு வழிபாடு நன்மை பயக்கும்: இந்திரா சவுந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2019 02:12
மதுரை: மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் நடந்த மகா பெரியவா 25வது ஆராத னை விழாவில் ’ஞால குருவும் ஞான குருவும்’ தலைப்பில் இந்திரா சவுந்தர்ராஜன் சொற் பொழிவு நிகழ்த்தினார்.அவர் பேசியதாவது: உலகிலேயே குரு வழிபாடு என்பது இந்தியாவுக்கே உண்டானச் சிறப்பு. குருவுக்கு பிறகு தான் கடவுள். கிரகங்களில் பிரகஸ்பதி என்கிற குரு வாகவும், கடவுளர்களில் ஈஸ்வரனே ஞான குருவாகவும் நமக்கு உற்ற துணையாய் உள்ளனர்.குரு வழிபாடு நமக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும்.
குரு பார்க்க கோடி புண்ணியம் கிடைக்கும் என்பர். இது கிரகங்களின் பிரகஸ்பதியை வைத்து சொன்னது. ஞான குருவான ஈஷனின் உபதேசம் தான் சிவஞான போதம். இது ஒரு அற்புத மான சித்தாந்தம். இதை உணர்ந்தோரின் வாழ்வு அமைதி நிறைந்ததாய் இருக்கும். மதுரை உருவாகவும் ஒரு குரு தான் காரணம். இந்த மதுரையில் மாணிக்க வாசகர் கிடைக்க இன்னொரு குரு காரணம். ஞான குரு, ஞால குரு என்கிற இரு குருவையும் மதுரை மண் தான் தந்தது. மதுரையில் இறைவன் பல அதிசயங்களை நடத்தினான். திருவிளையாடல் புராணம் இதை தெளிவாக சொல்கிறது, என்றார். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.