சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 550 வது ஜயந்தி விழா உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானிலுள்ள கர்தார் பூரில் உள்ள குருத்வாரா விழாக்கோலம் பூண்டு விளக்கொளியில் ஜொலிக்கிறது. மற்ற குருத்வாராக்களை விட இதற்கு தனிச் சிறப்பு உண்டு. குருநானக் 1469ல் முக்தி அடையும் வரை சுமார் 18 ஆண்டுகள் இங்குதான் தங்கியிருந்தார். மேலும், அவர் தன் கைப்பட எழுதிய சீக்கியர்களின் புனித நூலான, "குரு கிரந்த் சாஹிப் நூலின் கையெ ழுத்துப் பிரதி இங்கு பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.