ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்காக தமிழகம், கேரளா, வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அடுத்தாண்டு மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் துவங்க உள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘2026ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. பாலாலய பூஜை டிச.,1ல் நடக்கிறது. ரூ.2.26 கோடியில் ராஜகோபுரம் அமைக்கும் பணி, ரூ.5.50 கோடியில் புதிய விருந்து மண்டபம், அன்னதானகூடம், முடிகாணிக்கை மையம், பக்தர்கள் ஓய்வறை உள்ளிட்டவை கோவில் அருகே உள்ள மைதானம், ராட்டின மைதானங்களில் அமைக்கப்பட உள்ளது,’ என்றனர்.