திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, பெரிய அய்யம்பாளையம் என்ற ஊரில் குன்றில் உத்தமராயப்பெருமாள் கோயில் உள்ளது. பேச்சுக் குறைபாடுகள் ஆடு மேய் க்கும் சிறுவன் ஒருவனுக்கு இவர் பேசும் ஆற்றலைக் கொடுத்ததால், "ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் என அழைக்கப்படுகிறார். பேச்சுக்குறைபாடுள்ளவர்கள் இவருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால், நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!