கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமம். பிரயாகை, காசி, கயா தலங்களுக்கு ஒரே யாத்திரையில் சென்றுவருவது. திரி ஸ்தல யாத்திரை. அதுபோல மேடையில் அரசமரம், வேப்பமரம், ஆலமரம் வளர்ந்து காட்சி தருவது "திரிவேணி விருட்சங்கள் எனப்படும் மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஜோதிர்லிங்கத்தை தரிசித்து வெளியில் வந்தால், மிகப்பெரிய பிராகாரத்தில் திரிவேணி விருட்சங்களைக் காணலாம். அதன் கீழே சிறிய ராமர் கோயில் உள்ளது. இதுபோன்ற அமைப்பு அபூர்வம் எனக் கூறப்படுகிறது.