புவனகிரி : புவனகிரி ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தில், சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மருவத்துார் ஓம் சக்தி பக்தர்கள் மார்கழியில் சக்தி மாலை அணிந்து, விரதமிருந்து தை மாதத்தில் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி புவனகிரி வார வழிபாட்டு மன்றத்தில், 49ம் ஆண்டு சக்திமாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.இதில் புவனகிரி சுற்றுபகுதிகளில் உள்ள 36 கிராமங்களைசேர்ந்த 4 ஆயிரம் பேர் சக்தி மாலை அணிந்து கொண்டனர். மன்ற நிர்வாகிகள் பாலக்கிருஷ்ணன்,சுப்ரமணியன் மற்றும் மனோகரி ஏற்பாடு செய்திருந்தனர்.