பதிவு செய்த நாள்
24
டிச
2019
03:12
தர்மபுரி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச இருமுடி விழா கடந்த, 18ல் துவங்கியது. இவ்விழா வரும் பிப்., 7 வரை நடக்கிறது. பிப்.,8ல், தைப்பூச ஜோதி விழா நடக்கிறது.
இருமுடி விழா துவங்கியதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், அம்மனுக்கு பிடித்த சிவப்பு, மஞ்சள் ஆடைகளுடன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து, இருமுடி எடுத்து செல்ல துவங்கி உள்ளனர்.
ஆதிபராசக்தி கோவிலுக்கு இருமுடி எடுத்து செல்லும், பக்தர்களுக்காக, தர்மபுரி ஆறுமுக ஆச்சாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, கடை வீதி துணிக்கடைகளில், சிவப்பு, மஞ்சள் சேலை, வேட்டிகள், சுடிதார் உள்ளிட்வை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. 200 முதல், 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் இவற்றை, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக, வியாபாரிகள் கூறினர். தர்மபுரி மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்கப் படும் சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு, பக்தர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.