ஆரியங்காவு கோயிலில் ஜோதி ரூபத்தில் அம்பாள் ஐக்கியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2019 10:12
ஆரியங்காவு :கேரள மாநிலம் ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயிலில் நாளை (டிச.,26) நடக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அய்யனுடன் அம்பாள் ஜோதி ரூபத்தில் ஐக்கியமான நிகழ்ச்சி நடந்தது.
சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை தர்ம சாஸ்தா மணந்ததாக ஐதீகம். சவுராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையாக கருதி திருக்கல்யாண அழைப்பிதழ் அனுப்பி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் தேவசம்போர்டு கவுரவிப்பது வழக்கம். இதனால் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இரு தரப்பும் இணைந்து ஆண்டு தோறும் திருக்கல்யாணத்தை பாரம்பரியமாக நடத்தி வருகிறது.அய்யன், அம்பாள் ஐக்கியம்இந்த ஆண்டு திருக்கல்யாண விழா நேற்று துவங்கியது. கேரள மாநிலம் மாம்பழத்துறையில் பகவதி என அழைக்கப்படும் ஆரியங்காவு புஷ்கலாதேவி கோயிலில் நேற்று பகல் 12:00 மணிக்கு புஷ்கலா தேவியை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து ஆரியங்காவு அழைத்து வந்தனர். ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 6:45 மணிக்கு ஜோதியை ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயில் மேல்சாந்தி அனிஷ் குமார் ஏற்று, அய்யனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் திருக்காட்சி செய்விக்கப்பட்டது.பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த விழா கோயிலில் இன்று (டிச.,25) இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. விழாவை முன்னிட்டு புஷ்கலாதேவி அம்பாள் சார்பில் சம்பந்திகளுக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது.முன்னதாக மாலை 4:00 மணிக்கு தாலப்பொலி எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடக்கிறது. திருக்கல்யாண மண்டபத்தில் டிச., 26 இரவு 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.சங்கத்தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுச்செயலர் எஸ்.ஜெ.ராஜன், நிர்வாகிகள் மோகன், ஹரிஹரன், கண்ணன், ஆனந்தம், கமிட்டி உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.