அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2019 10:12
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று (டிச.,25) அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 1,00,008 வடை மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.