இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கவிஞருக்கு அவரின்
நண்பர் வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை அனுப்பினார். அதுதான்
சவப்பெட்டி. இப்படி அனுப்பியதற்காக அந்த நண்பர் வருத்தப்படவில்லை. அதைப்
பயன்படுத்தி அதனுள் படுத்துக் கொண்டு எப்படி கவிதை எழுதலாம் என்பது பற்றி
அமைதியாக சிந்திக்க ஆரம்பித்தார். பொதுவாக பணமாகவோ, பொருளாகவோ,
பத்திரிகைகளுக்கு சந்தாவாகவோ கிறிஸ்துமஸ் பரிசு அளிப்பது வழக்கம். இது மிக
வித்தியாசமான பரிசாக அந்த கவிஞருக்கு அமைந்தது. இந்த செய்தியை ஒரு
பத்திரிகை வெளியிட்டது. ஆனால், ஏனோ கவிஞரின் பெயரையும், பரிசளித்தவரின்
பெயரையும் வெளியிடவில்லை.