ஜெர்மனியிலுள்ள ஸ்வாபியா மாநிலத்தில் இளம்பெண்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. கிறிஸ்துமஸ் அன்று இரவில், குவியலாக கிடக்கும் மரக்குச்சிகளில் ஒன்றை எடுப்பார்கள். சிறிய குச்சி கையில் வந்தால், தங்களுக்கு வரப்போகிற கணவர் குட்டையாக இருப்பார் என்றும், பெரிய குச்சி வந்தால் உயரமாக இருப்பார் என்றும் முடிவு செய்வார்கள். அந்தக்குச்சி தடிமனாக இருந்தால், வீட்டுக்காரரும் குண்டாக இருப்பாராம். மெல்லியதாக இருந்தால் ஒல்லியாக இருப்பாராம். அதோடு விடுவார்களா என்ன! வருங்கால கணவரின் தொழில் பற்றி அறிய ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை எடுத்து, அதில் உருக்கிய அலுமினியத்தை ஊற்றுவார்கள். அந்த ஈயம் ஷூ வடிவில் மாறினால், அவர் செருப்பு தயாரிப்பவராக இருப்பாராம். சுத்தியல் மாதிரி வந்தால் தச்சராம். பிரம்பு மாதிரி இருந்தால் வாத்தியார் வேலை பார்ப்பாராம்.