பதிவு செய்த நாள்
25
டிச
2019
03:12
மதுரை: மதுரை தூய மரியன்னை ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் குழந்தை இயேசு சொரூபத்தை காட்டிய பிஷப் அந்தோணி பாப்புசாமி.
* மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அந்தோணியார் சர்ச்சில் வின்சென்ட் தேபவுல் சபை உள்ளது. இச்சபையினர், மிகவும் பின் தங்கிய வசதி இல்லாத, 19குடும்பத்தினரை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, இந்த தத்துக்குடும்பத்தினருக்கு, புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. விழா வுக்கு சபையின்தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். விழாவில் மிகவும் வசதி இல்லாத, 50பேருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
* உடுமலை : உடுமலை தளி ரோடு, சி.எஸ்.ஐ., இமானுவேல் ஆலயத்தில், கடந்த,1ம் தேதி, கீத ஆராதனையுடன் கிறிஸ்துமஸ் விழா துவங்கியது. தொடர்ந்து, முக்கிய வீதிகளில் பாடல் பவனி, கிராமத்தில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி, இன்று, 25 ல் அதிகாலை, 4:30க்கு, கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையும், 8:30க்கு, இரண்டாம் ஆராதனையும் நடக்கிறது. பிற தேவலாயங்களிலும், பல்வேறு சிறப்பு
திருப்பலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை, சித்தரிக் கும் வகையில், வீடுகளில், குடில் அமைத்து அலங்கரித்துள்ளனர். குழந்தைஇயேசு, அன்னை மரியாள், துாதர்கள் ஆகியோர்களது உருவங்களை கொண்டகுடில்களை வீடுகளின் முன்பு அமைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரித்து,கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கின்றனர்.
* புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.
ஜென்மராக்கினி மாதா ஆலயம்: புதுச்சேரி மிஷன் புனித ஜென்மராக்கினி மாதாஆலயத்தில் நடந்த விழாவில் புதுச்சேரி-கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிநடந்தது.முதன்மை குரு அருளானந்தம், பாதிரியார் கிரிக்கோரி, ஆலய பங்குத்தந்தை அல்போன்ஸ் சந்தானம், உதவி பாதிரியார்கள் பிரவின் குமார், லெனின் ஆகியோர் குழந்தை ஏசுவின் சொரூபத்தை குடிலில் வைத்தனர். நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் கலந்துகொண்டனர்.
இருதய ஆண்டவர் பசிலிகா: தேவாலயத்தில் இரவு 11.30 மணிக்கு குழந்தை ஏசுபிறப்பு நிகழ்ச்சி துவங்கியது. நள்ளிரவு 12.00 மணிக்கு பங்குத்தந்தை மரியஜோசப், குழந்தை ஏசு சொரூபத்தை ஏந்தி வந்து குடிலில் வைத்தார்.கப்ஸ் பேராலயம்: கப்ஸ் பேராலயத்தில் பங்குத்தந்தை சிரில் சாந்த் தலைமையில் நள்ளிரவு 12.00 மணிக்கு குழந்தை ஏசு சொரூபம் குடிலில் வைக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடந்தது.
* வில்லியனுார்: லுார்து அன்னை ஆலயம் பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையில் 12.00 மணிக்கு குழந்தை ஏசுவை குடிலில் வைக்கும் வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.நெல்லித்தோப்பு : புனித விண்ணேற்ப்பு அன்னை ஆலயத்தில் பங்குதந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் குழந்தை ஏசு சொரூத்தை குடிலில் வைத்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, ஜான்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர்.
* ரெயின்போ நகர்: ஜான் மரி வியானி ஆலயத்தில் பங்குத்தந்தை டொமினிக் ரொசாரியா தலைமையில் நள்ளிரவு 12.00 மணிக்கு குழந்தை ஏசு சொரூபம் குடிலில் வைக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடந்தது.ஆட்டுப்பட்டி: அந்தோணியார் பங்குத்தந்தை பாஸ்கல்ராஜ் தலைமையில் நள்ளிரவு12.00 மணிக்கு குழந்தை ஏசுவை குடிலில் வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டனர். இதேபோல் ரெட்டியர்பாளையம், உழவர்கரை, அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ்சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.
* ராமநாதபுரம் : ராமநாதபுரம் துாய ஜெபமாலை அன்னை சர்ச் உள்ளிட்ட 18 இடங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இயேசு கிறிஸ்து பிறப்பை கிறிஸ்தவர்கள்அனைவரும் கிறிஸ்துமஸ் விழாவாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இன்று 25ம் தேதிஇயேசு கிறிஸ்துபிறந்த தினத்தையொட்டி நேற்று (டிச.24) இரவு 11:45 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச்சில் சிறப்பு திருப்பலி ஆராதனை நடந்தது. இதில் பாதிரியார்அருளானந்து நற்செய்தி வழங்கினார். ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் அணிந்து பங்கேற்றனர்.உதவி பாதிரியார்கள் மரிய வளன், சைமன், சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு பங்கேற்றனர். முடிவில் கிறிஸ்து மஸ் கேக் வெட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல் இளம்செம்பூர், கீழத்துாவல், முதுகுளத்துார், சாயல்குடி, எமனேஸ்வரம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, கடலாடி உள்ளிட்ட 18 தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இன்று(டிச.25) அனைத்து கிறிஸ்தவ சர்ச்களில் காலை 5:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.