பதிவு செய்த நாள்
25
டிச
2019
03:12
மயிலம் : திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷ த்தையொட்டி நேற்று முன்தினம் 23ல் மாலை 5:00 மணிக்கு நந்திக்கு பால் சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சந்திரமவுலீஸ்வர சுவாமிக்கு நடந்த மகா தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர் கோவிலில் நந்திக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதேபோன்று, மயிலம் சுந்தர விநாயகர் கோவிலிலும் ரெட்டணை, பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர், ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.செஞ்சிசெத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனாகிய சொக்கநாதர் கோவிலில் சிவஜோதி மோன சித்தர் தலைமையில் கோபூஜை, சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது.
மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதேபோன்று, காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில், பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில், சந்தைமேடு காசி விசுவநாதர் கோவில், முக்குணம் முக்குன்றநாதர் கோவில், நெகனுார் பொன்னிபுரீஸ்வரர் கோவில்களில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.