Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ... ஆரியங்காவு தர்ம சாஸ்தா- புஷ்கலாதேவி திருக்கல்யாணம் ஆரியங்காவு தர்ம சாஸ்தா- புஷ்கலாதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10ம் தேதி ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10ம் தேதி ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

27 டிச
2019
10:12

சிதம்பரம்: நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசன உற்சவம் வரும் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் தேதி ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்மன் சமேத ஆனந்த நடராஜருக்கு மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனம் உற்சவ கொடியேற்றம் வரும் ஒன்றாம் தேதி நடக்கிறது. இதனையொட்டி வரும் 30ம் தேதி கொடி மரத்திற்கு விக்னேஸ்வர பூஜை, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஜனவரி 1ம் தேதி காலை, சிவகாமசுந்தரி அம்மன் சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, பிரகாரம் வலம் வந்து சன்னதி கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். காலை 7:00 மணிக்கு உற்சவக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிறப்பு வாகனத்தில் நடராஜர் புறப்பாடு உற்சவம் 10 நாட்கள் நடக்கிறது.

உற்சவத்தில் 5ம் நாளான, வரும் 5ம் தேதி தெருவடைச்சான் (சப்பரம்) தேரோட்டம், கோபுர தரிசனம் உற்சவம், 8ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிச்சாண்டவர் தரிசனம், 9ம் தேதி நடராஜர் ஆருத்ரா தேரோட்டம் நடக்கிறது. மாலை சுவாமி தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜசபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனை, அதிகாலை 2:00 மணிக்கு சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை, ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண ராஜ அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மதியம் 12:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று மதியம் 2:00 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar