திருப்புவனத்தில் மண்டல பூஜை: ஐயப்பன் சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2019 12:12
திருப்புவனம் : திருப்புவனத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு மின் விளக்கு அலங்காரத்தில் ஐயப்பன் வீதி உலா வந்தார்.
திருப்புவனம் புதூர் ஆனந்த ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து ஆனந்த ஐயப்பனுக்கு அஷ்டாபிசேகம், புஷ்பாபிசேகம் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல பூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கினர். சுவாமி மின்விளக்கு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஆலய ஸ்தாபகர் போஸ் தலைமையில் பக்தர்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
சிவகங்கை: பாகனேரி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு அய்யப்பன் திருவீதிவுலா நடந்தது. மதியம், இரவு இரண்டு நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை புல்வநாயகி அம்மன் ஐயப்ப யோகம், சபரிமலை அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்தனர்.