கோவை:கோவை, ’இஸ்கான்’ கோவிலில் நேற்று 29ம் தேதி திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், கோவை ’கொடிசியா’ அருகில் உள்ள,ஜெகன்நாதர் கோவிலில் திருமஞ்சன நிகழ்ச்சியை நடத்தியது. மரத்தில் வடிவமைக்கப்பட்ட ஜெகன்நாதர், பாலதேவர் மற்றும் சுபத்ரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆண்டுக்கு ஒரு முறை இந்த திருமஞ்சன நீராட்டு விழா, கோவையில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில் நடக்கிறது. பல நதிகளிலிருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. கோவையில், ஜன., 4ல் நடக்கும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. திருமஞ்சன நிகழ்ச்சியின்போது, பக்தர்கள், 1,008 வகையான உணவு பார்த்தங்களை நைவேத்தியம் செய்து படைத்தனர்.