சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் மார்கழி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2025 10:12
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக அருள் பாலிக்கும் இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவான இத்திருவிழாவையொட்டி நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. ஸ்தானிகர் திலீப் நம்பூதிரி கொடியேற்றினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டிச., 27- மூன்றாம் நாள் விழாவில் இரவு 10:30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நடக்கிறது. 2026 ஜன., 2 ஒன்பதாம் நாள் விழாவில் காலை 9:15மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகியவை வலம் வரும். அன்று அதிகாலை 12:00 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கும். நிறைவு நாளான ஜன., 3 அதிகாலை 4:00 மணிக்கு ஆரு த்ரா தரிசனமும், மாலை 5:00 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9:00 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது.