குரு ஸ்தலமான பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2025 04:12
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி வாக்கிஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் இராண்டாம் வியாழக்கிழமையான இன்று எமகண்டத்தில் கோவில் ஞான தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி மற்றும் சாமி வீதி உலா நடைபெற்றது திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ சுவாதந்தர நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்ச குரு தலங்களில் ஒன்றாகும். மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதரை வியாழன் வழிபட்டுதேவர்களுக்கெல்லாம் தலைவராக வரம் கேட்டார். அவரை, மாயூரநாதர் பெருஞ்சேரி கிராமம் சென்று ஈசனை பிரதிஷ்டை செய்து வணங்கினால் அருள் கிடைக்கும் என்று மாயூரநாதர் அருளியதால், பெருஞ்சேரியில் வியாழன் சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். சரஸ்வதிதேவி தன் பெயரால் லிங்கம் அமைத்து விதிப்படி பூசித்து தட்சன் யாகத்தில் வீரபத்திரனால் இழந்த மூக்கினை பெற்று வாக்கு வன்மையும் பெற்ற தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஒவ்வொரு வியாழக்கிழமை குருஓரை எமகண்டத்திலும் கோவில் ஞான தீர்த்த குளத்தில் குருவாரம் தீர்த்தவாரி நடைபெறவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு மார்கழி மாதம் இராண்டாம் வியாழக்கிழமையான இன்று எமகண்டத்தில் குருஓரையில் கோவில் ஞான தீர்த்த குளத்தில் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு வீதி உலா நடைப்பெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.