வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, வைரவசுவாமி, பேச்சியம்மாள், இசக்கியம்மாள் கோவிலின், 51ம் ஆண்டு திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடைபெற்றன. விழாவில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு நடுமலை அம்மையப்பன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு சாமபூஜை நடைபெற்றது. நேற்று காலை, 5:30 மணிக்கு நெய்வேத்தியமும், 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு சப்பர ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெறறன. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், அன்னதானம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.