அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை; சுவாமிக்கு ஆராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2025 05:12
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.
கேரள மாநிலம் அச்சன்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசாஸ்தா (ஐயப்பன்) திருக்கோவிலில், மண்டல பூஜை மகோத்சவ திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில், மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின. திருவிழாவின் முதல் ஐந்து நாட்களில் பிரதானமாக உற்சவபலி நடைபெற்றது. ஆறாம் மற்றும் ஏழாம் நாள்களில் கருப்பன் துள்ளல் சிறப்பு நிகழ்ச்சியும், எட்டாம் திருநாளில் பள்ளிவேட்டையும் நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான நேற்று டிசம்பர் 25 அன்று, கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெற்றது. இன்று பத்தாம் நாளான முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெற்றது. யானை மீது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து, மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்,