பதிவு செய்த நாள்
30
டிச
2019
02:12
திருத்தணி: வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், ஜன., 9ம் தேதி, ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் நடக்கிறது.திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான வடாரண்யேஸ் வரர் கோவில், திருவாலங்காட்டில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆருத்ரா விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆருத்ரா, மகா அபிஷேகம், வரும், ஜன., 9ம் தேதி இரவு நடை பெறுகிறது. அன்று, இரவு, 9:30 மணி முதல், மறுநாள் அதிகாலை, 4:00 மணி வரை தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமானுக்கு, 33 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. ஜன., 10ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு கோபுர தரிசனம், பகல், 1:30 மணிக்கு அனுக்கிரக தரிசனத்துடன், ஆருத்ரா விழா நிறைவடைகிறது.