பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் காப்புக்கட்டுடன் துவங்குகிறது. மே 5 காலை சிறப்பு அபிஷேகம் நடந்து, இரவு 2 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான தீவர்த்தி வெளிச்சத்தில் புஷ்பப்பல்லக்கில் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். மே 6ல், அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, இரவு காக்காத்தோப்பு பெருமாள் கோயிலை அடைகிறார்.
மே 7ல் மன்டூக மகரிஷி சாப விமோசனமும், அன்று இரவு விடிய விடிய தசாவதாரத்தில் காட்சி தந்து, மே 8ல் கருடசேவை, மே 9ல், ராஜாங்க கோலத்துடன், மே 10 காலை புஷ்பப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பட்டு மாலை 6 மணிக்கு மீண்டும் கோயிலை சென்றடைகிறார்.
மே 11ல், உற்சவசாந்தியும், மறுநாள் பால்குடத்துடன் விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி பாபுஜி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.