பதிவு செய்த நாள்
02
ஜன
2020
12:01
மஞ்சூர் : மஞ்சூரில் ஐயப்பன் விளக்கு பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மஞ்சூரில், 56 ம் ஆண்டு, ஐயப்பன் விளக்கு பூஜை நடந்தது.
இதனை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை; பகல் 3:00 மணிக்கு அலங்கரித்த புலி வாகனத்தில், பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், செண்டை மேளம், தெய்யம், பூக்காவடி, கேரளா பேண்டு வாத்தியம் முழங்க, மூலவரை பக்தர்கள் ஊர்வலமாக, குந்தா சிவன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின், பாலக்கொம்பு எடுத்து மேளங்கள் முழங்க விளக்கு ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, உடுக்கையடி பாடல் ஐயப்பன் வரலாறு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பால்கிண்டி எடுத்தல், திரி உழிச்சல், வாவர் துள்ளல் விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:00 மணிக்கு மறு பூஜை ஆராதனை, மங்களம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.