ஊட்டி : ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில், ஆலய முன்னேற்ற சங்க, 33வது ஆண்டுவிழா; புத்தாண்டை முன்னிட்டு, 108 சங்காபிஷேக சிறப்புயாகம் நடந்தது.
இங்குள்ள ஆலய முன்னேற்ற சங்க, 33வது ஆண்டுவிழா; புத்தாண்டை முன்னிட்டு, 108 சங்காபிஷேக சிறப்புயாகம் நடந்தது. காலை,7:30 முதல், 9:30 மணிவரை நடந்த, இந்த யாகத்தில், மூலவர் முன்னிலையில், 108 சங்குகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று பக்த கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து, காசிவிஸ்வநாதருக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 11:00 மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டது.