பதிவு செய்த நாள்
02
ஜன
2020
12:01
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, 2,000 முருக பக்தர்கள் பாதயாத்திரையை நேற்று துவக்கினர். குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு தோறும் முருக பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். நடப்பாண்டு, குன்னுார் வி.பி., தெரு, கிருஷ்ணாபுரம், வண்ணாரப்பேட்டை, ஒட்டுப்பட்டறை, வசம்பள்ளம், பாய்ஸ் கம்பெனி, பாரத்நகர், பழத்தோட்டம், எம்.ஜி.ஆர்., நகர், கன்னி மாரியம்மன் கோவில் தெரு, காந்திபுரம், நான்சச், காட்டேரி, கரோலினா எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 2,000 பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரையாக நேற்று புறப்பட்டனர்.
குன்னுார் தீயணைப்பு நிலையம் அருகே விநாயகர் கோவில், மவுன்ட் ரோடு விநாயகர் கோவில், சிவசுப்ரமணிய சுவாமி கோவில், வெலிங்டன் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தி, நடைபயணத்தை துவக்கினர். குன்னுார் விவேகானந்தா நற்பணி மன்றம் சார்பில்,பிளாக் தண்டர்காளி கோவில் அருகே, நேற்று மதியமும், விசாகா பாதயாத்திரை குழு சார்பில் இரவிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆட்டையம்பாளையம், அவிநாசி பூவா சுவாமி கவுண்டர் மண்டபம், திருப்பூர், சூரிய நல்லூர், தாராபுரம், நரிக்கல்பட்டி, பாலாறு, பழனி பகுதிகளில் அன்னதானமும் நடக்கிறது. இந்த குழுவினர் வரும், 4ம் தேதி பழநியை அடைகின்றனர். தொடர்ந்து தரிசனம் முடித்து வாகனங்களில் திரும்ப உள்ளனர்.