புதுக்கோட்டை: புதுகை அருகே தீயை விழுங்கி பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டை புள்ளான் விடுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விநாயகர் நோன்பு விழா நடந்தது. இதில் பக்தர்கள் தீயுடன் கூடிய மாவிளக்கை விழுங்கும் விழா நடந்தது. மார்கழி மாதத்தில் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் விநாயகர் நோன்பு விழா கொண்டாடப்படுகிறது. இதில் விநாயகருக்கு உகந்த 21 பதார்த்தங்கள் படையல் இடப்பட்டு தீபாராதனை நடந்தது. பின் பக்தர்கள் தீயுடன் கூடிய மாவிளக்கை பயபக்தியுடன் உண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.